பட்டப்பகலில் கொழும்பில் 33 பேரை கடத்திய அரசு - சபையில் பகிரங்க குற்றச்சாட்டு
பத்தரமுல்ல பகுதியில் நேற்றைய தினம் பட்டப்பகலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமை ஒரு கடத்தல் சம்பவம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸநாயக்க பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக தமது கட்சி ஒரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 33 பேரை தனிமைப்படுத்துமாறு நேற்று பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்தார்.
அத்தகைய முடிவுக்கு மத்தியில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் முல்லைத்தீவில் உள்ள ஒரு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
தொடர்புடைய அமைச்சர், பொலிஸ் மா அதிபர் அல்லது ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?
இது அரசாங்கத்தின் அரசியல் சூனிய வேட்டை. எனவே முல்லைத்தீவிற்கு அனுப்பப்பட்டவர்கள் உடனடியாக மீள அழைக்கப்பட வேண்டும எனவும் குறிப்பிட்டுள்ளார்.