ஊழலுக்கு எதிரான எமக்கு பாரிய அச்சுறுத்தல்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
ஊழலுக்கு சார்பான அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் எமக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை 2025.10.12 ஆம் திகதி பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு இங்கு வீட்டு உரிமைகள் வழங்கப்பட்டன.
வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை அரசு, இந்திய அரசுடன் இணைந்து, மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும்.
இந்த வீட்டுத் திட்டம், மலையக சமூகத்தினருக்கு ஒரு வீட்டை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தாய் நாட்டிற்கு ஆற்றலை வழங்கும் "மதிப்பிற்குரிய பிரஜைகளாக" மாற்றுவதற்கான அடித்தளமாகவும் இருக்கும்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
எமக்கெதிரான அச்சுறுத்தல்......
எமது நாட்டின் ஏழ்மைக்கு பிரதான காரணம்,இலஞ்சம் ஊழலாகும்.இது அரசியல் வாதிகள் முதல் அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை வியாபித்துள்ளது.இதற்கு முடிவு கட்ட வேண்டும். அதற்காக நாம் பாரிய செயற்றிடங்களை மேற்கொண்டுள்ளோம்.எமது நடவடிக்கைகளுக்கு எதிராக நிற்கும் அரசியல் செயற்பாடுகள் எமக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.
அவர்களிடம் இருக்கும் அதிக பணப்பலம்,அத்தோடு அவர்களின் ஏவல்களாக செயற்பட்ட அரச அதிகாரிகளுடன் இருக்கும் தொடர்பு மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள்,சட்டவிரோத ஆயுதங்கள் ஆகியன இவர்களிடம் இருக்கிறது.ஆனாலும் இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டும். அதை முன் கொண்டு செல்லுவேன் என உறுதியளிக்கிறேன். மலையக மக்கள் 202 வருடங்களாக மிகவும் இக்கட்டான வாழ்க்கையே வாழ்ந்த வருகின்றனர்.
மந்தபோசணை,சிறந்த சுகாதாரமின்மை மற்றும் தூய நீர் வசதியின்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.
மேலும் தனியார் நிறுவனங்களுக்கு மலையக மக்களின் சுகாதார வசதிகளை தீர்மானிக்க இடமளிக்க முடியாது.மலையகத்திலுள்ள வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்தின் ஆளுக்கைக்குள் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளார.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
