வளமான நாடு எனக் கூறி நீதிமன்ற சுயாதீனத்தை அழிக்கின்றது அநுர அரசு - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் விசனம்

Sajith Premadasa Sri Lankan political crisis
By Rakesh Jul 05, 2026 02:04 AM GMT
Report

வளமான நாடும் அழகான வாழ்க்கையும் அமைத்துத் தருவோம் எனக் கூறி அதிகாரத்துக்கு வந்த 'திசைகாட்டி' (தேசிய மக்கள் சக்தி) அரசு, இன்று நீதிமன்றத்தின் சுயாதீனத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான பொதுமக்கள் கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பது 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகியவற்றுடன் சுதந்திர ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாடுகளின் ஊடாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

தற்போது அரசு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 63 லிருந்து 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 லிருந்து 67 ஆகவும் அதிகரிக்க முயற்சித்து வருகின்றது.

எனினும், இந்த இரு உயர் நீதிமன்றங்களிலும் தலா 8 நீதியரசர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான திடீர் அரசமைப்புத் திருத்தங்கள் ஜனநாயக முறைமைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் கொடுக்கப்படும் மரண அடியாகும்.

இதன் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு சவால் விடுக்கப்படுவதுடன், அதன் நம்பகத்தன்மை குறித்தும் பல சந்தேகங்கள் எழுகின்றன.

வளமான நாடு எனக் கூறி நீதிமன்ற சுயாதீனத்தை அழிக்கின்றது அநுர அரசு - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் விசனம் | Anura Govt Destroying Judicial Independence

20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 12 லிருந்து 20 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 11 லிருந்து 17 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பாடுகள் நிலவினால் நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஏனெனில், அது நீதிமன்றத்துக்கான வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதாக அமையும்.

ஆனால், இவ்வாறான தன்னிச்சையான முறையில் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நீதிமன்றத்தின் நற்பெயரையும் அதன் பிம்பத்தையும் கெடுக்கும் செயலாகும்.

கொழும்பு சட்ட சங்கம், சட்டத்தரணிகள் சங்கம், கொழும்பு மேன் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள், இந்த வயதெல்லை அதிகரிப்பால் ஏற்படும் பாதகமான நிலைமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளன.

'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற மக்கள் ஆணையை மீறி சர்வாதிகாரப் போக்கை நோக்கிச் செல்ல வேண்டாம் என நான் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

எமது நாட்டுக்குத் தேவை ஜனநாயகமே அன்றி சர்வாதிகாரம் அல்ல. எனவே, இனம், மதம், சாதி, வர்க்க, கட்சி பேதங்கள் இன்றி, ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே முன்னிற்கும்" என குறிப்பிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US