அரசியல் பழிவாங்கலில் அரசு ஈடுபடவில்லை! ஆளும் தரப்பு எச்சரிக்கை
அநுர அரசு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கடந்த காலங்களில் கோப்புகளைகளை மறைத்திருந்தனர்.
அரசியல் பழிவாங்கல்
அவற்றை மீள விசாரணைக்கு உட்படுத்தி எடுப்பதற்கு சிறிது காலம் செல்லும். சில விடயங்களுக்காகக் பிணை கிடைத்தாலும் வழக்கு விசாரணை தொடரும்.

பொலிஸார் உரிய வகையில் செயற்படுவார்கள் என நாம் நம்புகின்றோம். பொலிஸாருக்குரிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்.
சிலர் கூறுவதுபோல் அநுர அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை. நடைபெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில்தான் விசாரணைகள் முன்னோக்கிச் செல்கின்றன" என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam