அர்ச்சுனாவைப் பார்த்து அஞ்சுகிறதா அநுர அரசு! மறுத்துப் பேச ஏன் தாமதம்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் சரியானதா பிழையானதா என தெரியவில்லை ஆனால் தைரியமாக முன்வந்து பேசுகின்றார். கேள்வி கேட்கின்றார். அவரது கேள்விக்கு முதலில் பதில் வழங்க முடியாமல் ஆட்சியாளர்கள் திணறுகிறார்கள் என சிவில் சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களில் ஒருவராவது இவ்வாறு பேசும் தைரியம் உள்ளவராக இருக்கின்றாரா? 76 வருட அரசியலை பேசுபவர்களுக்க ஜேவிபி செய்த அநியாயங்கள் ஞாபகம் உள்ளதா எனவும் ஷிராஸ் யூனுஸ் கேள்வியெழுப்பினார்.
ஜேவிபியினரால் கைப்பற்றப்பட்ட அடையாள அட்டைகள், கொள்ளையடித்த தங்கங்கள் திருப்பிகொடுக்கப்பட்டனவா என்றும் அவர் இதன்போது வினா எழுப்பியிருந்தார்.
இது தொடர்பான விரிவான நேர்காணலை கீழுள்ள காணொளியில் காணலாம்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
