இலங்கையை உலுக்கிய 100 வழக்குகளின் முழுப் பட்டியல்.. திடீரென ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்
புதிய ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.
நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் தாமதத்திற்கான சாத்தியமான தீர்வுகளை எடுக்கவே இந்த குழு என தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், ஒன்றுகூடிய எதிர்க்கட்சியினருடனான கூட்டத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த திடீர் கூட்டம் தொடர்பிலும் அதன்போது முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கூட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்க, "நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடி ஒரு தீர்மானத்தை முன்வைத்து, அதை அடுத்த சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் நான் கூறுகிறேன்.
இந்த நாட்டில் உள்ள இந்த 1.1 மில்லியன் வழக்குகளுக்குத் தீர்வு காண்பது குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்கவும்” என எதிர்க்கட்சி தலைவரிடம் குறிப்பிட்டிருந்தார்.
இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam