பேரினவாதத்திற்கு அடிபணியும் தேசிய மக்கள் சக்தி! செல்வராஜா கஜேந்திரன் காட்டம்
இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை, என இலங்கை நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து தெரிவித்துள்ளார் என்றால் அவர் எந்தளவு சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடிபணிந்து இருக்கின்றார் என்பதை புரியகூடியதாகவுள்ளது என செல்வராஜா கஜேந்திரன்(S. Kajendran)தெரிவித்துள்ளார்.
பொங்கு தமிழ் பற்றி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தேசிய மக்கள் சக்தி அரசிற்குள் இருக்கும் எந்தவொரு நபராக இருந்தாலும் அவர்கள் இந்த பேரினவாதத்திற்கு அடிப்பணிந்து தான் அவர்கள் இந்த பதவிகளில் இருக்க முடியும் என்பதை நீதியமைச்சரின் கருத்து வெளிப்படுத்துகின்றது.
எனவே எங்களுடைய மக்கள் தமிழ் இலட்சியத்திற்காக போராடும் தரப்புகளை பலப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |