உணவகம் இடிந்து வீழ்ந்து விபத்து - பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு
ஹட்டன், கினிகத்தேன பகுதியிலுள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்ததில், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் கினிகத்தேனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கினிகத்தேன நகருக்கு ஒரு பயிற்சி வகுப்பில் பங்கேற்க சென்ற மாணவர்கள், உணவு பெறுவதற்காக குறித்த உணவகத்திற்குச் சென்றுள்ளனர்.
கட்டுமான குறைபாடு
மாணவர்கள் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவர்கள் நின்ற தளம் இடிந்து சுமார் 15 அடி கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த உணவகத்தின் பாதுகாப்பற்ற கட்டுமானமே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.