மக்களிடம் இருந்து நிதியைச் சுரண்டும் அநுர அரசு - ஆனந்த பாலித்த பகிரங்க குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples NPP Government
By Rakesh Oct 03, 2026 03:51 AM GMT
Report

அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் கப்பலிலிருந்து இறக்கப்படும் அதே குறைந்த விலைக்கு மக்களுக்கு எரிபொருளை வழங்குவோம் என்றும், விலை சூத்திரங்களை அகற்றி வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவோம் என்றும் வாக்குறுதி அளித்த தற்போதைய ஆட்சியாளர்கள், இன்று மக்களிடம் இருந்து பல்வேறு வழிகளில் நிதியைச் சுரண்டி வருகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து நேற்று(02.10.2026)  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வரிகள் மூலம் பெறப்பட்ட நிதி

மேலும் தெரிவிக்கையில், "உலக நிலவரங்களையும் பிராந்திய மோதல்களையும் காரணம் காட்டி, கையிருப்பில் உள்ள பழைய எரிபொருள் இருப்புகளுக்கு அரசு தன்னிச்சையாக விலையை உயர்த்தியுள்ளது.

மக்களிடம் இருந்து நிதியைச் சுரண்டும் அநுர அரசு - ஆனந்த பாலித்த பகிரங்க குற்றச்சாட்டு | Anura Government Is Draining Funds From The People

பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் அரசும் இணைந்து வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டுவதற்கு வழிவகுத்து, மக்களிடம் இருந்து மறைமுகமாகப் பணத்தைப் பறித்து வருகின்றன.

மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையை உயர்த்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பெருந்தொகையை மானியமாக வழங்குவதாக அரசு போலி மாயையைத் தோற்றுவிக்கின்றது.

ஆனால், மக்களின் கைகளிலிருந்து வரிகள் மூலம் பெறப்பட்ட நிதியையே மீண்டும் மானியம் என்ற பெயரில் காட்டி, மக்கள் மீது இரட்டைச் சுமையைச் சுமத்துகின்றது.

மறைமுக சுரண்டல்கள்

நிலக்கரி கொள்முதலில் இடம்பெற்ற கோடிக்கணக்கான ஊழல்கள் மற்றும் முறைகேடான ஒப்பந்தங்களால் ஏற்பட்ட பெரும் நிதி இழப்புக்களை மூடிமறைக்கவும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கவுமே இவ்வாறான சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன.

மக்களிடம் இருந்து நிதியைச் சுரண்டும் அநுர அரசு - ஆனந்த பாலித்த பகிரங்க குற்றச்சாட்டு | Anura Government Is Draining Funds From The People

முறையான விலை ஒழுங்குமுறை குழுவொன்றை நியமிக்காமல், தன்னிச்சையான கடிதங்கள் மூலம் சட்டவிரோதமாக விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன.

தேர்தல் காலத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளைப் பயன்படுத்தி குறைந்த விலையில் எரிபொருள் வழங்குவதாகப் பேசிய தலைவர்கள், தற்போது மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி வருகின்றனர்.

எனவே, அரசு உடனடியாக இத்தகைய மறைமுக சுரண்டல்களை நிறுத்திவிட்டு, வெளிப்படைத்தன்மையான விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதுடன், சுமையற்ற வகையில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த குடும்பத்திற்கு தொடரும் ஆபத்து! மற்றுமொரு மோசடியில் நாமல் - யோசித

மகிந்த குடும்பத்திற்கு தொடரும் ஆபத்து! மற்றுமொரு மோசடியில் நாமல் - யோசித

வெளிநாட்டுப் பெண்ணை ஏமாற்றிய முச்சக்கரவண்டி சாரதி - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

வெளிநாட்டுப் பெண்ணை ஏமாற்றிய முச்சக்கரவண்டி சாரதி - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US