அனுரவுடன் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார் : சஜித் அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க விடுத்த பகிரங்க விவாதத்துக்கு தாம் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் அம்சம் என்பதால் விவாதத்திற்கு தாம் எப்போதும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தம்மை விவாதத்திற்கு அழைப்பவர்கள்,தம்மை போன்றே பேருந்துகள் வழங்கல்,பள்ளிகளுக்கு மற்றும் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குதல் போன்ற திட்டங்களை முன்னெடுக்குமாறு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அனுரகுமார திசாநாயக்கவுடன் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
