இலங்கையை நோட்டமிடும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள்..!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முந்தைய அரசாங்கங்களின் வெளிநாட்டு உறவாடல்களால் பெரும் அழுத்தங்களை முகங்கொடுத்து வருகின்றது என பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர், அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், "தற்போது, உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் நிலைமை தான் அநுரவிற்கும். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒரு பனிப்போர் தான் நடந்து கொண்டிருக்கின்றது.
அநுரவிற்கு, ஏதாவது ஒரு அழுத்தத்தை கொடுப்பதற்காக தான் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்புக்கள் மற்றும் அவரின் மகனுடனான சந்திப்புக்கள் அல்லது ரணிலை அடிக்கடி அழைப்பது போன்றவற்றில் ஈடுபடுவதுமாக இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களின் கழுகு பார்வையில், இலங்கை இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |