லசந்த - வசீம் தாஜூதீன் கொலைகளில் தொடர்புடையவர்கள் குறித்து ஜனாதிபதி அளித்துள்ள உறுதி
வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலைகள் மற்றும் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவங்களுக்கு காரணமானவர்களை அரசாங்கம் விசாரணை செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.
அமைதியான மக்களை கொன்று குவித்த குற்றவாளிகள், அந்த சம்பவங்களுக்கு பதிலளிக்கவில்லை இந்தநிலையில் அனைவரும் அச்சமின்றி வாழும் சூழல் உருவாக்கப்படும் என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய செய்திகளை எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம் எனவும் சுட்டகாட்டியுள்ளார்.
தம்புள்ளையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இந்த உறுதியை அளித்துள்ளார்.
அனைத்து கொலைகளின் சகாப்தம்
அரசியல் அதிகாரத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும்.
இந்தநிலையில் அனைவரின் உயிர்களும் பெறுமதியானவை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதோடு, அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி நடத்தப்படும் அனைத்து கொலைகளின் சகாப்தம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
