தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்
கிளிநொச்சி
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (14) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில், மாவட்டக் கிளையின் செயலாளர் வீரவாகு விஜயகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த அஞ்சலி நிகழ்வில், கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முள்ளியவளை
அரசியல் ஆர்வலரும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகருமான அன்ரன் பாலசிங்கத்தின் (Anton Balasingham) 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளியவளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்றையதினம் (14.12.2024) மாலை சமூக செயற்பாட்டாளர் ஞா.யூட்சன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நினைவு நாள்
இந்த நிகழ்வில் முன்னாள் போராளி போசன் மற்றும் முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றையதினம் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்கள் பல இடங்களிலும் நடைபெற்றிருந்தது.
பருத்தித்துறை
தமிழ்தேசத்தின் அரசியலின் முக்கிய பங்காளரான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 18ஆவது நினைவு தினம் பருத்தித்துறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (14.12.2024) ஜனநாயக போராளிகள் கட்சியினரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மலர் வணக்கம்
இதன்போது, அந்தக் கட்சியின் தலைவர் சி.வேந்தன் ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.

இதனையடுத்து, மலர் வணக்கத்தில் ஏனைய கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தலை மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri