ஊழல்களே மக்களை வறுமை நிலைக்கு தள்ளியது: நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்கம்
நீண்ட காலமாக ஆட்சியில் இருப்பவர்களும் அவர்களுடைய ஊழல்களும் அதிகார அடக்குமுறைகளும் மக்களை வறுமை நிலைக்கு தள்ளியது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீபன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி-முரசுமோட்டை பகுதியில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த அரசாங்கமானது கடந்த போகத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்ளளவு செய்யாமையினால் தாங்கள் குறைந்த விலைகளிலே நெல்லை விற்பனை செய்து பாரிய நட்டத்தை எதிர்கொண்டதாகவும் இந்த விவசாய மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மக்களுடைய கோரிக்கை
தேசிய மக்கள் சக்தியானது நாட்டு மக்களுடைய கிராமிய அபிவிருத்தி விவசாயம், கால்நடை, கடற்றொழில் துறை என்பவற்றை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம். எனவே, இந்த மக்களுடைய கோரிக்கை நியாயமானது.
அதாவது இந்த பிரதேசம் விவசாய பிரதேசமாக இருக்கின்ற போதும் இரணைமடு குளத்திலே போதிய நீர் இருந்தும் 6000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு இந்த முறை சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்படாத நிலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உடனடியாக நடவடிக்கை
அதாவது ஒரு சிலரது அரசியல் நோக்கங்களுக்காகவும் தவறான கணிப்பீடுகளாலும் ஊழல் காரணமாகவும் தனிப்பட்ட சுரண்டல்கள் காரணமாக இந்த மாவட்டத்தின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தேசிய ரீதியிலே உணவு உற்பத்தியில் ஒரு பாரிய பின்னடைவாக காணப்படுகின்றது.
எனவே, இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
