ஏழு விருதுகளைப் பெற்ற நல்லூர் பிரதேச செயலகம்
யாழ். நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட 'வெளிச்சத்தின் விளக்கு' குறுநாடகம் சிறந்த நாடகப் பிரதியில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளதோடு ஏழு விருதுகளையும் வென்றுள்ளது.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கான ஆக்கத்திறன் விருது வழங்கும் நிகழ்வு - 2024 அமைச்சின் அமைச்சர் பேராசிரியர் ஹனிதம சுனில் செனவி தலைமையில் நேற்று(13.12.2024) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட 'வெளிச்சத்தின் விளக்கு' குறுநாடகம் சிறந்த நாடகப் பிரதியில் முதலாம் இடம் பெற்றது.
ஏழு விருதுகள்
அத்துடன், சிறந்த நாடக நெறியாள்கையிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன் சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த இசையமைப்புக்கான விருது என ஜந்து விருதுகளைப் பெற்றுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான தேசிய ரீதியில் சிறந்த குறுநாடகம் என்ற விருதையும் பெற்றதோடு சிறந்த குறுநாடகத்தை அளிக்கை செய்த திணைக்களம் என்ற பாராட்டுச் சிறப்பு விருதையும் பிரதேச செயலாளருக்காகக் கையளிக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச செயலகம் நேற்றைய நிகழ்வில் மொத்தமாக ஏழு விருதுகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
