வாழைச்சேனையில் இருவருக்கு தொற்று உறுதி
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று அறுபத்தாறு (66) பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் இரண்டு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் மருத நகர் கிராமம் முடக்கப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் இடம்பெற்ற மரண வீட்டிற்குச் சென்றவர்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்று வெளியான தரவின் படி ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில் இவர்களது நெருங்கிய உறவுகள் பதினாறு பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இரண்டு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாசிவந்தீவு கிராமத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இங்கு கடமையாற்றும் ஐம்பது பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் எவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்படவில்லை என வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
குறித்த அன்டிஜன் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்று அதிகரித்துக்
காணப்படும் நிலையில் ,மக்களின் பாதுகாப்பு கருதி தொடர்ச்சியாக பி.சி.ஆர்.
பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் என்பன இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



