தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உடன் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு அழைக்கப்பட்டு நேற்று (22) 5 மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.
விசாரணை
மட்டக்களப்பைச் சேர்ந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வீட்டிற்கு கடந்த 18 ம் திகதி சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் முகநூலில் கட்சியின் தலைவர் விடுதலைப் புலிகளின் தலைவர் ஒன்றாக இருந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியதாகவும் அது தொடர்பான விசாரணைக்கு கொழும்புக்கு வருமாறு கடிதத்தை வழங்கினர்.

இந்த நிலையில் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணியகத்துக்கு இன்று காலை சென்ற அவரிடம் சுமார் 5.00 மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணை இடம்பெற்றதாகவும் அதற்கான வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து மாலை 3.00 மணிக்கு வெளியேறியுள்ளதாக தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |