அனைத்து அரச நிறுவனங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை..
அனைத்து அரச நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கான சுற்றறிக்கை இன்று(17) வெளியிடப்படும் என்று நேற்றையதினம்(16)இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
தொடர்ச்சியான போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் பாரிய அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களும் தமது நிறுவனங்களைப் போதைப்பொருள் அற்ற பகுதிகளாக மாற்றுவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மக்கள் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ள நாமல்! அம்பலமாகியுள்ள ராஜபக்சர்களின் சித்து விளையாட்டுக்கள்.
ஒழுக்காற்று நடவடிக்கை
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எவரேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது கட்டாயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் நிறுவப்படும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
உயர் பாடசாலைகள் முதல் தொலைதூரக் கிராமங்கள் வரை போதைப்பொருள் கடத்தல் பரவியுள்ளதைக் காட்டுகின்ற சுற்றிவளைப்புகளின் தகவல்களின் அடிப்படையில், இந்த அச்சுறுத்தலைத் தடுக்க அனைத்து நிறுவனங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.