கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு! கைதான மற்றொரு பெண்
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றுமொரு பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 7ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் 16ஆம் ஒழுங்கைப் பிரதேசத்தில் குறித்த துப்பாக்கிசூடு இடம்பெற்றது.
மேலதிக விசாரணை
இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 32 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், இந்தக் குற்றத்தைச் செய்ய வெளிநாட்டில் வசிக்கும் ஒரு குற்றக்கும்பல் உறுப்பினருடன் தொடர்பைப் பேணி, குற்றவாளிகளுக்கு மோட்டார் வாகனமொன்றை வழங்கியமை மற்றும் கொல்லப்பட்டவர் பயணித்த வீதி பற்றிய தகவல்களை இந்தச் சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் கைது
அதன்படி மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
சீனாவின் ரகசிய அணு ஆயுத விரிவாக்கம்- மலைப்பகுதியில் புதிய ஆயுத நிலையங்கள் கண்டுபிடிப்பு News Lankasri
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri