சர்வதேச நிறுவனம் ஒன்றின் மேலாளராகும் இந்திய வம்சாவளி பொது மகன்
இந்தியாவின் மற்றும் ஒரு பொதுமகன் சர்வதேச நிறுவனம் ஒன்றின் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனமான “வீம் சொப்வெய்ர்” (Veeam software) ஆனந்த் ஈஸ்வரன் என்பவரை தமது நிறுவனத்தின் மேலாளராக நியமித்துள்ளது.
அத்துடன் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுத்துள்ளது.
மும்பாயில் கணணி பட்டயம் பெற்ற அவர், கொலம்பிய- மிஸ்ஸூரி பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.
“வீம் சொப்ட்வெய்ர்” இந்த வருடத்தில் 4 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டிருந்ததுடன் ஒரு பில்லியன் டொலர்களை மொத்த வருமானமாக பெற்றது.
இந்தநிலையில் சிறந்த உலகளாவிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சை, பராக் அகர்வால் மற்றும் சத்யா நாதெல்லா போன்ற இந்திய வம்சாவளி நிர்வாகிகளின் வரிசையில் ஆனந்த் ஈஸ்வரனும் இணைகிறார்.
ஏற்கனவே இந்தியா வம்சாவளிகளான சுந்தர் பிச்சை (கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்) சத்யா நாதெல்லா(மைக்ரோசாப்ட்)சாந்தனு நாராயண்( அடோப் நிறுவனம்) அரவிந்த் கிருஷ்ணா (ஐபிஎம்) ராஜீவ் சூரி (இன்மார்சாட்), புனித் ரென்ஜென்(டெலாய்ட் நிறுவனம்), வசந்த் நரசிம்மன் (நோவார்டிஸ் நிறுவனம்). இவான் மானுவல் மெனேசஸ் (டியாஜியோ), நிராஜ் எஸ். ஷா (வேஃபேர்), சஞ்சய் மெஹ்ரோத்ரா (மைக்ரொன்), ஜோர்ஜ் குரியன் (நெட்ஆப்), நிகேஷ் அரோரா (பாலோ எல்டோ நெட்வொர்க்), தினேஷ் சி பாலிவால் (ஹர்மன் இன்டர்நேஷனல் இண்டஸ்ட்ரீஸ்), ஜெய்ஸ்ரீ வி உல்லால் (அரிஸ்டா நெட்வொர்க்) ), ரங்கராஜன் ரகுராம் (விஎம்வேர்), அஜய் பங்கா (மாஸ்டர்கார்ட்), அஞ்சலி சுட் (விமியோ) லீனா நாயர்( பிரெஞ்சு பெஷன் ஹவுஸ்) ஆகியவற்றின் மேலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
