இன்று நள்ளிரவு முதல் மற்றுமொரு விலை குறைப்பு
கோதுமை மா விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், கேக்கின் விலையையும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று ஹட்டன் பிரதேச பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண் மற்றும் பருப்புக்கறியின் விலை
இதேவேளை, அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்புக்கறியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவானது 130 ரூபாவிற்கு விற்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.