இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் மற்றுமொரு விலை குறைப்பு
அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்புக்கறியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவானது 130 ரூபாவிற்கு விற்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மா விலை குறைப்பிற்கான நிவாரணம்
எல்பிட்டியவில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன், மாவின் விலை குறைப்பிற்கான நிவாரணத்தை மக்களுக்கு வழங்க நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் பாணின் விலையானது பத்து ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.