15 உயிர்களை காவு வாங்கிய பகுதியில் மற்றுமொரு விபத்து
வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில்,லொறியும் மோட்டார் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து அந்த பகுதியிலுள்ள யாலபோவ டிப்போவிற்கு எதிரில் இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் லொறி வீதியில் கவிழ்ந்துள்ள நிலையில், போக்குவரத்துக்குக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோர விபத்து
எல்ல-வெல்லவாய பகுதியில் கடந்த வியாழக்கிழமை(04) பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த 34 பேரில்15 பேர் உயிரிழந்திருந்தனர்.
மேலும், 18 பேர் காயமடைந்ததாகவும் ஒரு பயணி காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற குறித்த தனியார் சுற்றுலாப் பேருந்து, நுவரெலியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ஒரு சொகுசு காரில் மோதி பள்ளத்தில் விழுந்தமை குறிப்பிடத்தக்கது.



