சிறைச்சாலையில் ராஜிதவின் பரிதாபங்கள்....! பிரதான அரசியல்வாதியின் செயற்பாடுகள்
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன மகிழ்ச்சிகரமாக தனது நேரத்தை கடத்துவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறைச்சாலையின் N பிரிவில் கைதிகளால், சுவர்களில் முன்பு எழுதப்பட்டிருந்த கவிதைகளை ராஜித படித்து மகிழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கவிதைகள் தனக்கு சுவாரஸ்யமான நினைவுகளாக இருப்பதாக, சக கைதிகளிடமும் சில சிறை அதிகாரிகளிடமும் ராஜித தெரிவித்து வருகிறார்.
ராஜிதவின் கோரிக்கை
அவர் சிறை அதிகாரிகளிடமிருந்து எந்த வசதிகளையும் கோரவில்லை. கடந்த புதன்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர் சிறைக்கே செல்ல வேண்டும் என்று சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் உட்பட சுமார் 25 கைதிகள், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் N பிரிவில் ராஜிதவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் ராஜித சேனாரத்ன தினமும் செய்தித்தாள்கள் படிப்பதிலும் தொலைக்காட்சி பார்ப்பதிலும் தனது நேரத்தை செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறை அதிகாரிகள்
கடந்த வாரம் முன்னாள் அமைச்சரை சந்திக்க பலர் சிறைச்சாலைக்கு வந்து சென்றுள்ளனர்.

இதன் காரணமாக அவர் காலை மற்றும் பிற்பகலில் பெரும்பாலான நேரத்தை பார்வையாளர்களுடன் செலவிட வேண்டியிருந்தது என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் நேற்று பார்வையாளர்களை சந்திக்க கைதிகளுக்கு அனுமதி வழங்கப்படாமையினால் சிறை அறையில் ராஜித சேனாரட்ன தனது நேரத்தைச் செலவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri