நாட்டு மக்களை அச்சுறுத்தும் சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள்! கேகாலையில் வெடித்துச் சிதறிய அடுப்பு
கேகாலை, ரோக் ஹில் - கஹடப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளர் இன்று காலை தேனீருக்காக தண்ணீர் வைத்துவிட்டு குளியலறைக்கு சென்ற போது பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது.
இதன்போது, எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக நாட்டில் இவ்வாறு பல சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருந்ததோடு, இதன்காரணமாக யுவதி ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக நாட்டு மக்கள் எரிவாயு அடுப்பினை பயன்படுத்துவது குறித்து பாரிய அச்சுறுத்தல் நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை, கடந்த காலங்களில் எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு விலையேற்றம் என்ற பல்வேறு பிரச்சினைக் காரணமாக வரிசையில் நின்று மிகவும் சிரமத்திற்கு மத்தியில் மக்கள் எரிவாயுவைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் தற்போது குறித்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுவது பொதுமக்களின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாக பார்க்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள்..
வித்தியாசமான நிறை கொண்ட எரிவாயு சிலிண்டருக்குள் மர்ம பொருள்? - அதிர்ச்சித் தகவல்

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
