மற்றுமொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும்: சுட்டிக்காட்டும் ஜனாதிபதி
இறக்குமதி - ஏற்றுமதிக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை தொடர்ந்தும் கடன்பட்டிருந்தால், ஒரு தசாப்த காலப்பகுதிக்குள் மற்றுமொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கேகாலை - மாங்கெதர தெம்பிட்ட விகாரைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட பொதிகரா மற்றும் தங்க வேலி திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில், “அரசாங்கத்திற்குள் நிதி நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய சட்டமொன்று எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வெளிநாட்டு நிதி உதவிகள்
இந்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்குள் நாட்டின் கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியினால் இலங்கை ஒரு வங்குரோத்தான நாடு என முத்திரை வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் மாற்றத்தை கொண்டு வந்து, இழந்த வெளிநாட்டு நிதிஉதவிகளை மீளப் பெற்று நாட்டுக்கே திருப்பித் தரப்படும்.
சர்வதேச நாணய நிதியம்
அது மாத்திரமன்றி, சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி விரைவில் தீர்வு காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
2022 இல் இருந்து இலங்கை ஒரு வங்குரோத்து நாடாக முத்திரை குத்தப்பட்டது. இதன் காரணமாக, சர்வதேச நிதி நிறுவனங்களும் வங்கிகளும் எங்களுக்கு ஆதரவு மற்றும் கடன் வழங்குவதை நிறுத்திவிட்டன.
இந்தத் தடையை நீக்குவதே எங்களது முதல் முன்னுரிமை. எனவே, நாம் கடன்களை திருப்பி செலுத்தும் நாடு என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |