சூடானில் மற்றுமொரு தாக்குதல்: 50க்கும் மேற்பட்டவர்கள் பலி
சூடானின் (Sudan) ஓம்துர்மன் நகரில் உள்ள திறந்த சந்தைக்குள், துணை இராணுவக் குழு நடத்திய தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் குறைந்தது 158 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் கலாசார அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான காலித் அல்-அலைசிரின் தகவல்படி, இந்தத் தாக்குதலில் பல பெண்கள் மற்றும் சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரமும், நாட்டின் மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர்.
தொடர் தாக்குதல்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சூடானின் துணை இராணுவக்குழு 2023ஆம் ஆண்டில் இருந்து நடத்தி வரும் தாக்குதல்களால், இதுவரை 28,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உரிமைகள் குழுக்களின் கூற்றுப்படி, இனரீதியான கொலை மற்றும் தவறான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படல் உள்ளிட்ட கடுமையான அட்டூழியங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025