அனோஜன் மரண தண்டனை விவகாரம்: சவூதி அரேபியா இளவரசருக்கு மனோ கணேஷன் விடுத்துள்ள வேண்டுகோள்
சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மத் பின் சல்மான், அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, அவரை நாட்டுக்குத் திருப்பி அனுப்புமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானுக்கு ஒரு வேண்டுகோளை விடுப்பதுடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையும் நினைவுபடுத்துகிறேன்.
20 வருடங்களுக்கு முன் மன்னிப்பு வழங்கிய தாய்
இதன்படி, சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் கொல்லப்பட்ட தனது மனைவி ராஜமணியை இழந்த இலங்கை கணவர் சகாதேவன், தனது மனைவியைக் கொலை செய்த சவூதி பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, சவூதி பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மன்னிப்பைத் தெரிவுசெய்து, சவூதி தாயை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றினார்.

இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில், அனோஜனுக்கு கருணையும் பொதுமன்னிப்பும் வழங்குமாறு இளவரசரிடம் பணிவுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஒரு இலங்கை குடும்பம் அன்று சவூதி தாய்க்கு மன்னிப்பு வழங்கியது. இன்று சவூதி அரேபியா ஒரு இலங்கை மகனுக்கு கருணை காட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை 28 படத்தின் 3வது பாகமா.... அட்டகாசமாக வந்த அறிவிப்பு, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்... Cineulagam