கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர்வரும் 24 ஆம் திகதி வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி - கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கலின் ஆரம்ப வைபவமான விளக்கு வைத்தல் 17ஆம் திகதி ஆரம்பமாகி பூசையை தொடர்ந்து பிரம்பு வழங்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி ஆலயத்திலிருந்து மாட்டு வண்டில்களில் பண்டமெடுத்து வருவதற்காக மீசாலை புத்தூர் சந்தியில் அமைந்துள்ள பண்டமரவடிக்கு சென்றுள்ளனர்.
பொங்கல் விழா
இவ்வாறு பண்டமெடுப்பதற்காக சென்ற மாட்டுவண்டிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 24 ஆம் திகதி இரவு ஆலயத்தை வந்தடைந்ததும் பொங்கல் விழா நடைபெற உள்ளது இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்ய வருகின்ற அடியவர்களுக்கான போக்குவரத் மற்றும் சுகாதார வசதிகள் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை ஆலயத்திற்கு வழிபட வருவோர் தங்க ஆபரணங்களை அணிதல் போன்வற்றை தவிர்த்து குற்ற செயல்களை குறைப்பதற்கும் வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.