கிளிநொச்சி - முகமாலை ஆரோக்கியமாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா
வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த கத்தோலிக்க மக்களின் புனித யாத்திரை தளங்களில் ஒன்றாக காணப்படும் கிளிநொச்சி - முகமாலை ஆரோக்கியமாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் திருச்சொருப பவனியும் வெகு சிறப்பாக இன்று (21.09.2025) நடைபெற்றுள்ளது.
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க மக்களின் புனித யாத்திரை தலங்களில் முதன்மையான தலங்களில் ஒன்றாக காணப்படும் முகமாலை ஆரோக்கியமாதா ஆலயத்தின் நற்கருணை ஆராதனையும் திருச்சொருப பவனையும இன்று மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கடந்த 19ஆம் திகதி நவ நாள் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை திருநற்கருணை ஆராதனையும் திருப்பலி பூசையும் நடைபெற்றது.
இதையடுத்து இன்று காலை யாழ். மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய ஜஸ்ரின்பேனாட் ஞானப்பிரகாசத்தின் தலைமையில் திருப்பலி பூசை நடைபெற்று ஆரோக்கியமாதாவின் திருச்சொருப பவனியும் இடம்பெக
இதில் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருந்தொகையான கத்தோலிக்கர்கள் மற்றும் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.










