வவுனியாவில் நீர்வழங்கல் தடையேற்படும் இடங்கள் தொடர்பிலான அறிவிப்பு
வவுனியாவில் நீர் வழங்கல் திட்டத்தில் செய்யப்பட வேண்டிய முக்கிய சுத்திகரிப்பு வேலை காரணமாக நீர் வழங்கலில் தடை ஏற்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வவுனியா மாவட்ட பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா நீர் வழங்கல் திட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (25) காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை முக்கிய சுத்திகரிப்பு மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் நீர் வழங்கலில் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
தோணிக்கல், குட்ஷெட் வீதி, கண்டி
வீதி, மன்னார் வீதி, உள் சுற்றுவட்டவீதி, வெளி சுற்றுவட்ட வீதி, நிலைய வீதி,
வைரவபுளியங்குளம், தேக்கவத்தை, மதீனாநகர், இரட்டைப்பெரியகுளம், நவகம, அளுத்கம,
சந்தை சுற்றுவட்டம், பூங்கா வீதி, ஹொரவபொத்தான வீதி, பஸார் வீதி, குடியிருப்பு
வீதி, கந்தசுவாமி கோவில் வீதி, 1வது குறுக்குத் தெரு, 2வது குறுக்குத் தெரு,
யாழ்ப்பாண வீதி மற்றும் கற்குழி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு குறித்த நேரத்தில் நீர் வழங்கல் செயற்பாடானது தடைப்படும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.



