கோவேக்சின் தடுப்பூசிக்கான அங்கீகாரம் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பு
கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது.
இந்நிலையில்,கோவேக்சின் தடுப்பூசிக்கான அங்கீகாரம் குறித்து அக்டோபர் 6 ஆம் திகதி முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில்,பன்னாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்படும் தடுப்பூசி பட்டியலிலும் கோவேக்சின் இடம்பெறவில்லை.
இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசிக்கான அங்கீகாரம் குறித்து அடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
