பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
பாடசாலை போக்குவரத்து சேவை தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் உட்பட சகல வாகனங்களுக்கான கட்டண நிர்ணயம் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வரைபை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாரித்துள்ளது.
பரீட்சைகளுக்கான உத்தியோகபூர்வ திகதி
இந்நிலையில், இவ்வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர் தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான உத்தியோகபூர்வ திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, இந்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையில் நடத்தப்படவுள்ளது.
5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
அத்துடன், 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள், இந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 15 மணி நேரம் முன்

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri
