வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
தற்போதைய 2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகளுக்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான வேதியியல் பிரிவில் நோபல் பரிசை பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசுகள் கருதப்படுகிறது. நோபல் பரிசை வென்றவர்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பணம், மற்றும் பதக்கமும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்படும்.
நோபல் பரிசுகள் ஆண்டு தோறும் குறிப்பிட்ட துறைகளில் சிறப்பாக செயல்படும் தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படும்.
வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் ஆகிய பிரிவுகளின் கீழ் தான் நோபல் பரிசுகள் அளிக்கப்படுகிறது.
2022ம் ஆண்டின் நோபல் பரிசுகள் அனைத்தும் அக்டோபர் 3ம் தேதி முதல் 10ம் திகதி வரை அறிவிக்கப்பட்டு வருகின்றது.
அக்டோபர் 3ம் தேதி அன்று மருத்துவ துறைக்கான நோபல் பரிசை ஸ்வான்டே பாபோ என்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் மனித பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்விற்க்காக வென்றுள்ளார்.
இதேபோல், அக்டோபர் 4ம் தேதியான நேற்று இயற்பியல் துறைக்காக பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கர் ஆகிய மூவர் வென்றுள்ளனர்.
இந்நிலையில், அக்டோபர் 5ம் திகதியான இன்று வேதியியல் பிரிவிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கரோலின் ஆர். பெர்டோஸி, டென்மார்க்கை சேர்ந்த மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவின் கே. பாரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் “கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக” இந்த பரிசை வென்றுள்ளனர்.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
