கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு! (Photos)
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையானது ஜனவரி முதலாம் திகதி முதல் வீட்டுத் தரிசிப்பும், பராமரிப்பும் வைத்திய சேவையினை பொது மக்களின் வீடுகள் தோறும் வருகை தந்து வழங்கவுள்ளனர் என மாவட்ட வைத்தியாசலையின் பணிப்பாளர் மருத்துவர். எஸ். சுகந்தன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் இன்று முதல் நாட்ப்பட்ட நோயாளர்கள் மற்றும் வீட்டில் படுக்கை நோயாளர்களாக உள்ளவர்களின் மருத்துவ தேவையினை அவரவர் வீடுகள் தேடி வந்து பூர்த்தி செய்யவுள்ளனர்.
எனவே இச் சேவையினை பெற்றுக்கொள்ள விரும்பும் பொது மக்கள் 021 2283037 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளுமாறும் அச் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச் சேவையானது முதற்கட்டமாக பொன்னகர், மலையாளபுரம், பாரதிபுரம், விவேகானந்தநகர், கிருஸ்ணபுரம், உதயநகர் மேற்கு, உதயநகர் கிழக்கு, அம்பாள்குளம்,ஆனந்தபுரம், தொண்டமான்நகர், கணகாம்பிகைகுளம்,அம்பாள்புரம், திருவையாறு, திருவையாறு மேற்கு இரத்தினபுரம், கிளிநொச்சிநகர், மருதநகர்,பன்னங்கண்டி, கனகபுரம், திருநகர் வடக்கு திருநகர் தெற்கு,ஜெயந்திநகர், பெரியபரந்தன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படவுள்ளதும் எனவும் இதன்போது அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
