சுவிஸ் கூட்டாட்சி அரசு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
சுவிஸ் கூட்டாட்சி அரசு மக்களுக்கான இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
குறித்த முக்கிய தகவல்கள் பின்வருமாறு,
24.02.2021பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட மூலங்களை மீள திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உணவகங்கள் தொடர்ச்சியாக மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்.மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து சுவிஸ் நாட்டில் கடைகள் திறக்கப்படும்.
வாசிகசாலைகளின் வாசிப்பு அறைகள் மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து திறக்கப்படும்.தாவரவியல் பூங்கா, மிருகக்காட்சி சாலைகள், விளையாட்டு கூடங்கள் மற்றும் களியாட்ட கூடங்கள் ஆகியன மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து திறக்கப்படும்.
மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து வெளியக நிகழ்வுகளில் 15 பேர் ஒன்றாக சேர அனுமதி வழங்கப்படுகின்றது.
மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து 20 வயதுக்குட்பட்ட இளையோர்கள் எதுவித வரையறையும் இன்றி விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளில் ஈடுபட அனுமதி வழங்கப்படுகின்றது.
இவை சார்ந்த மேலதிகமான தளர்வுகள் சார்ந்த விபரங்கள் 12.03.2021 வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என சுவிஸ் கூட்டாட்சி அரசு அறிவித்துள்ளது.