செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி போரில் ஈடுபடவில்லை..! இத்தாலி அரசு வெளியிட்ட அறிவிப்பு

Italy Saudi Arabia
By Amal Sep 20, 2026 10:30 PM GMT
Report

செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை என துணைப் பிரதமரும், வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சரும் அன்டோனியோ தஜானி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந்த முக்கிய கடல் வழியில் வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில் இத்தாலியப் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததாக வெளியான செய்திகள் மற்றும் இத்தாலியுடன் தாங்கள் போரில் ஈடுபடவில்லை என்ற ஹூதி அமைப்பினரின் அறிக்கைகள் குறித்து இத்தாலிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார்.

சவூதி அரேபியாவில் தாக்கப்பட்ட விமானம்

சவூதி அரேபியாவிலுள்ள தாயிஃப் விமானப் படைத்தளத்தின் மீது ஹூதி அமைப்பினர் நடத்திய தாக்குதலில், தரையிறக்கப்பட்டிருந்த இத்தாலியின் F-2000 (Eurofighter) ரகப் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி போரில் ஈடுபடவில்லை..! இத்தாலி அரசு வெளியிட்ட அறிவிப்பு | Announcement Italian Government War

செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தேப் நீரிணை ஊடாகப் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்களை ஹூதி தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் “அஸ்பைட்ஸ்” பாதுகாப்புக் கடற்படை நடவடிக்கை உருவாக்கப்பட்டது.

இந்த நீரிணைப் பகுதியில் நிலைமை மோசமடைந்து வரும் பின்னணியில், இத்தாலி தொடர்ந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், இந்த திட்டத்தைப் புதுப்பித்து வலுப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இத்தாலியின் ஒட்டுமொத்த கடல்சார் வர்த்தகப் போக்குவரத்தில் 40 சதவீதமானவையும், ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 60 சதவீதமானவையும் செங்கடல் வழியாகவே கடந்து செல்வதால், இந்தப் பிராந்தியத்தில் தமது நாட்டிற்கு பலமான மூலோபாய நலன் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.        

இளவரசி டயானா நினைவு தினம் நெருங்கும் நிலையில் மன்னர் சார்லஸ் தொடர்பில் வெளியான சர்ச்சை பதிவு

இளவரசி டயானா நினைவு தினம் நெருங்கும் நிலையில் மன்னர் சார்லஸ் தொடர்பில் வெளியான சர்ச்சை பதிவு

மாணவர்கள் முகத்தை மூடத் தேவையில்லை..! இத்தாலி அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

மாணவர்கள் முகத்தை மூடத் தேவையில்லை..! இத்தாலி அரசாங்கம் அதிரடி அறிவிப்பு


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US