ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலை..! ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு
ஒக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தை குறைப்பதற்காக அரசாங்கம் மானியம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸையில் இன்று (20) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளின் அடிப்படையில், ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் விலை மற்றும் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் செலவைக் கணக்கிடும்போது, ஒக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விலை உயர்வினால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைப்பதற்காக அரசாங்கம் மானியம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது பெரும் சுமை ஏற்படும்போது, அந்தச் சுமையை முழுமையாக அவர்களிடமே சுமத்த முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் சில உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.