இறந்தவர்களின் பெயரில் அஸ்வெசும பணம்..! ரூ.30 மில்லியன் மோசடி அம்பலம்

Crime Money Aswasuma
By Shadhu Shanker Sep 20, 2026 06:49 AM GMT
Report

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடி தொடர்பான விசாரணையில், அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு சுமார் 30 மில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை உறுதிப்படுத்தப்பட்டால், இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடிகளில் மிகப்பெரியதாக இது அமையக்கூடும் என ஆங்கில வாராந்த பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாரிய மோசடி

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக, உயிரிழந்த வயோதிபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களின் பெயரில் அஸ்வெசும பணம்..! ரூ.30 மில்லியன் மோசடி அம்பலம் | Norwood Probe Sri Lanka S Largest Aswesuma Fraud

நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய இந்த மோசடி தொடர்பில் இதுவரை 20 அரச ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோர்வூட் பிரதேச செயலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடியில் சுமார் 30 மில்லியன் ரூபாவும், தலவாக்கலை பிரதேச செயலகத்துடன் தொடர்புடைய சம்பவத்தில் சுமார் 2 மில்லியன் ரூபாவும் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 10 பேர் பணி நீக்கம்

நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வுப் பிரிவு, நோர்வூட் சம்பவம் தொடர்பில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. எனினும், இதுவரை இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, நோர்வூட் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 18 அரச ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் பெயரில் அஸ்வெசும பணம்..! ரூ.30 மில்லியன் மோசடி அம்பலம் | Norwood Probe Sri Lanka S Largest Aswesuma Fraud

அவர்களில் 10 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய நான்கு ஊழியர்களும் ஆறு ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.

மேலும், இரண்டு பெண் அரச ஊழியர்கள் அரச சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 50 நாட்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பத்திரிக்கை  செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனோஜனின் விடுதலைக்காக கொட்டும் மழையிலும் போராட்டம்

அனோஜனின் விடுதலைக்காக கொட்டும் மழையிலும் போராட்டம்

தீவிரமடையும் காலநிலை - இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை

தீவிரமடையும் காலநிலை - இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US