இளவரசி டயானா நினைவு தினம் நெருங்கும் நிலையில் மன்னர் சார்லஸ் தொடர்பில் வெளியான சர்ச்சை பதிவு
இளவரசி டயானாவின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் தொடர்பில் சர்ச்சைக்குரிய செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த தகவலை, இளவரசி டயானாவின் தம்பியான சார்லஸ் ஸ்பென்சர் எழுதிய "ஸ்வான் சாங்: டயானா, மை சிஸ்டர்" என்ற புதிய புத்தகத்தில் உள்ள பல குறிப்புகளை அடிப்படையாக கொண்டு கண்டறியப்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம்(19.09.2026) இங்கிலாந்து நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்தப் புத்தகம் நாளைய தினம்(22.09.2026) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 வயதில் வாரிசாக்கப்பட்ட ஸ்பென்சர்
ஏப்ரல் 1992ஆம் ஆண்டு நார்தாம்ப்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில், ஸ்பென்சர் மற்றும் இளவரசி டயானாவின் தந்தையின் இறுதிச் சடங்கின் போது, இந்த உணர்வற்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
அப்போது, 27 வயதான ஸ்பென்சர், தனது தந்தையின் உடல் தேவாலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டபோது அழுது கொண்டிருந்தார். அந்த சமயத்தில், இளவரசர் சார்லஸ், "நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி" என்று கூறினார்.

ஸ்பென்சர் மீண்டும் அவரிடம் கேட்டபோது,“ இவ்வளவு இளம் வயதில் பிரபு என்ற பட்டமும், அதனுடன் வரும் 13,000 ஏக்கர் (52.61 சதுர கிலோமீட்டர்) நிலமும் சொத்துக்களும் வழங்கப்பட்டது ஒரு பெரும் பாக்கியம்” என்று சார்லஸ் மீண்டும் வலியுறுத்தினார்.
இதன்போது, இளவரசர் சார்லஸ் ஒரு பிடிவாதமான குழந்தையைப் போன்று, தன்னுடைய கால்களைத் தரையில் தட்டி நடந்து சென்றதாகவும் ஸ்பென்சர் கூறுகிறார்.
73 வயதில் அரியணை ஏறிய மன்னர் சார்லஸ்
அந்த காலத்தில், தனக்கு 43 வயதாகியும், தனக்குக் கீழ் 50 பேர் பணிபுரிந்தும் வந்தபோதிலும், தனது பெற்றோர் தன்னை ஒரு குழந்தையைப் போலவே நடத்துவதாக இளவரசர் சார்லஸ் முரண்பட்டதாகவும் கூறியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணி 96 வயது வரை ஆட்சி செய்தார், மேலும் மன்னர் சார்லஸ் 2022 செப்டம்பரில் தனது 73 வயதில் பிரிட்டிஷ் அரியணை ஏறினார், இதன் மூலம் அரியணை ஏறிய மிக வயதான பிரிட்டிஷ் அரச குடும்ப உறுப்பினர் என்றும் அடையாளப்படுத்தபட்டார்.
1997ஆம் ஆண்டு, இளவரசி டயானாவின் மரணத்திற்கு பின்னர், நடந்த மற்றொரு சர்ச்சைக்குரிய சம்பவமும் முன்னர் வெளியிடப்பட்ட பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.