மீண்டும் மோசமடையும் காலநிலை - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
இரண்டாம் இணைப்பு
நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டம் 2 மண்சரிவு எச்சரிக்கை
காலி மாவட்டம்: நாகொட, நெளுவ
கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை, கங்க இஹள கோரளை
கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, தெரணியகல
மாத்தறை மாவட்டம்: பிடபெத்தற நுவரெலியா மாவட்டம்: கொத்மலை, கொத்மலை கிழக்கு
இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை, எஹெலியகொட
களுத்துறை மாவட்டம்: பாலின்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள
கட்டம் 1 மண்சரிவு எச்சரிக்கை
கொழும்பு மாவட்டம்: சீதாவக்க
களுத்துறை மாவட்டம்: இங்கிரிய
கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய
மாத்தறை மாவட்டம்: கொடபொல, அக்குரஸ்ஸ
இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவானை
காலி மாவட்டம்: தவலம
முதலாம் இணைப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) மாலை 7.00 மணி முதல் நாளை மாலை 7.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
காலி மாவட்டத்தின் நாகொட
களுத்துறை மாவட்டத்தின் பாலின்தநுவர
கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை
கேகாலை மாவட்டத்தின் தெரணியகல
இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.