மக்களுக்கு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் விசேட அறிவித்தல்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மைய கள ஆய்வுகளின் போது மூடப்படாத கிணறுகள், குழாய்க் கிணறுகள், நீர்த்தாங்கிகள், கூரைப்பீலிகள், பராமரிக்கப்பாடாத மலசலகூடங்கள், மூடப்பட்டுள்ள வீடுகள், பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகள், கடல் ஓரங்களில் காணப்படும் தோணிகள், படகுகள் என்பன ஆட்கொல்லி டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்கு மிகவும் சாதகமான காரணியாக உள்ளன.
அறிவுறுத்தல்
எனவே கிணறுகள், குழாய்க்கிணறுகள்,நீர்தாங்கிகள்,ஆகியவற்றை நுளம்புவலைகளால் மூடுமாறும், கூரைப்பீலிகளை அகற்றிவிடுமாறும், மூடப்பட்ட வீடுகள், வெற்றுவளவுகளை பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகள், வீடுகள், படகுகள், தோணிகள் ஆகியவற்றை நுளம்புகள் பெருகாத வண்ணம் தொடர்ச்சியாக பராமரிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றாடலில் நுளம்பு பெருகும் சாதனங்களை இல்லாதொழிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை எடுக்க தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் மிக மனவருத்ததுடன் தெரிவித்துக் கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஜேர்மனியில் வாகன சோதனையின்போது தப்பியோட முயன்ற பிரித்தானியர்: அவரது சூட்கேஸிலிருந்த பொருள் News Lankasri