ரஸ்ய ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு
உக்ரைன் மீது படையெடுப்பதனை தவிர வேறு மாற்று வழியில்லை என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் பாதுகாப்பு கரிசனை குறித்த பிரயத்தனங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்த காரணத்தினால் அடுத்த கட்ட நடவடிக்க எடுக்க நேரிட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஸ்ய கைத்தொழிலாளர்கள் மற்றும் முயற்சியான்மையாளர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் நேட்டோ படையில் இணைத்துக் கொள்ளக் கூடாது என ரஸ்யா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரஸ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டு அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
போராட்டம் நடத்தியவர்களை ரஸ்ய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உக்ரைன் மீது படையெடுத்தமையை கண்டித்து ரஸ்யாவின் பல பகுதிகளிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரஸ்ய தலைநகர் மொஸ்கோ உள்ளிட்ட 24 இடங்களில் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, உக்ரைன் உயிர்ச் சேதங்கள் மிக அதிகமாக் காணப்படலாம் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
உக்ரைனில் உள்ள இலங்கை பிரஜைகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
குண்டு மழை பொழியும் போர் விமானங்கள்! ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் : உக்ரைன் அதிபரின் பதிலடி
ரஸ்யாவுக்கு எதிராக திரளும் அண்டைநாடுகள்! ஐரோப்பாவும் இணைகிறது! நியாயம் கூறும் ரஸ்யா

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
