தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு

Sri Lankan Tamils Batticaloa Sri Lanka
By Kumar Apr 19, 2026 05:29 AM GMT
Report

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த அஞ்சலி நிகழ்வானது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியா ஏ9 வீதியில் 3356 வது நாளாக சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபடும் பந்தலில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு விளக்கேற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு அமைதியான முறையில் இடம்பெற்றதுடன், அன்னை பூபதியின் தியாகம் மற்றும் உரிமை கோரிய போராட்டங்கள் மீண்டும் நினைவுகூரப்பட்டன.

இதேவேளை அன்னை பூபதி அவர்களின் நினைவு தினம் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

செய்தி - திலீபன்

திருகோணமலை

அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு, இன்று (19) காலை திருகோணமலை, வெருகல் கலாச்சார மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ​

திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களும் சமூக செயற்பாட்டாளர்களும் மலர் தூவி தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். ​

வெருகல் பிரதேச சபையின் தவிசாளர், சமூக செயற்பாட்டாளர்கள் ​ பெண்கள், இளைஞர்கள், ​ அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ​

1988ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த அன்னை பூபதியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இந்த அஞ்சலி நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் அதேசமயம் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

செய்தி - கியாஸ்

திருகோணமலை சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று (19) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது அன்னாரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, விளக்கேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் அரசியல்வாதிகள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

செய்தி - ஹஸ்பர்

பருத்தித்துறை

தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது நினைவேந்தல் பருத்தித்துறையில் இன்றைய தினம் (19.04.2026) காலை 10:30 மணியளவில் ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயாநந்தம் ஜெயகோபி தலைமையில் ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் திரு உருவ படத்திற்கான பொது ஈகை சுடரினை ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் ஏற்றிவைத்து மலர் மாலையினையும் அணிவித்தார்.

தொடர்ந்து மலர் அஞ்சலியினை பால சதீஸ்வர குருக்கள் ஆரம்பித்து வைக்க நிகர்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது நினைவுரையினை ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் நிகழ்த்தினார்.

இதில் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

செய்தி - எரிமலை

கிளிநொச்சி

அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று (19.02.2026) கிளிநொச்சி சேவை சந்தைக்கு முன்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வு தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் சிறப்புற இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வர்த்தகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் முன்னாள் போராளிகள் என பலரும் கலந்துகொண்டு தமது உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

செய்தி - தேவானந்தன்

முல்லைத்தீவு

இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக 31 நாட்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2026) முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனது மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில், அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, சமூகசெயற்பாட்டாளர் கிருஸ்ணபிள்ளை சிவகுரு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

செய்தி - தீசன்

கிளிநொச்சி

மலரும் புதுயுகம் அமையத்தின் ஏற்பாட்டில் தியாகி அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வும் அன்னை பூபதி நினைவு நாளை முன்னிட்டு அறநெறி மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி ஈட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இன்று நடைபெற்றுள்ளது.

தியாகி அன்னை பூபதியினுடைய வரலாறுகளை இளையோரிடையே கடத்தும் நோக்கில் அறநெறி மாணவர்களிடையே அன்னை பூபதி நினைவாக நடத்தப்பட்டிருந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் தியாகி அன்னை பூபதியினுடைய நினைவு நாள் நிகழ்வும் புதுயுகம் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (18-04-2026) கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாவட்ட வர்த்தகர் சங்கத்தினர் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், மதகுருமார்கள், மலரும் புதுயுகம் அமையத்தின் உறுப்பினர்கள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு | Anniversary Commemoration Of Mother Bhupathi

செய்தி - சுடரோன்

ஊர்தி பவணி

அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக எதிர்கால சந்ததிக்கு அன்னையின் தியாகத்தையும், தமிழின போராட்டத்தின் வரலாற்றையும் கடத்தும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பவணி 10ஆம் நாளான நேற்று (18.04.2026) மட்டக்களப்பின் படுவான்கரை பிரதேசங்கள் பலவற்றிற்குக் கொண்டு செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

களுவாஞ்சிக்குடி நகரில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வூர்திப் பவணியானது வெல்லாவெளி, மண்டூர், கொக்கட்டிச்சோலை, வவுணதீவு பிரதேசங்களுக்குச் சென்று அங்கு மக்களின் அஞ்சலிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அத்துடன், மக்களும் உணர்வுபூர்வமாக அன்னைக்கு அஞ்சலி செலுத்தினர்.

உடன் தகவல் வழங்கவும்! இலங்கையில் பொது மக்களுக்கு CID விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

உடன் தகவல் வழங்கவும்! இலங்கையில் பொது மக்களுக்கு CID விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

கடந்த 9ஆம் திகதி யாழ். நல்லூர் தியாகி திலீபன் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வூர்தி பவணி வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள பிரதேசங்கள் அனைத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு இன்று அன்னை பூபதியின் நினைவிடத்தில் முடிவுறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் ஊர்தியுடன் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

திடீரென கோடிஷ்வரர்களான ஜே.வி.பி அமைச்சர்கள்! சட்ட நவடிக்கைக்கு தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி

திடீரென கோடிஷ்வரர்களான ஜே.வி.பி அமைச்சர்கள்! சட்ட நவடிக்கைக்கு தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US