திடீரென கோடிஷ்வரர்களான ஜே.வி.பி அமைச்சர்கள்! சட்ட நவடிக்கைக்கு தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி
அமைச்சர் கே.டி. லால் காந்த உள்ளிட்ட என்பிபி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு சொத்துக்களை ஈட்டினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குச் செல்ல ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக அந்த கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
விசேடமாக அமைச்சர் லால் காந்த தனது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பித்தபோது அவரது சொத்து மதிப்பு 46 கோடி ரூபாவிற்கும் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
ஒரு வருடத்திற்குள் இவ்வளவு பாரிய சொத்துக்கு அவர் உரிமையாளரானது எவ்வாறு சாத்தியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒன்றரை வருடத்திற்குள் சேர்த்த பாரிய சொத்துக்கள்
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 82 (1) (இ) பிரிவின் கீழ் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்துக்களில் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மாற்றம் ஏற்பட்டால் ஒரு மாத காலத்திற்குள் புதிய சொத்து மற்றும் பொறுப்பு விபரக் கூற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கமைய அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களும் எவ்வாறு சொத்துக்களை ஈட்டினார்கள் என்பது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தேர்தலை இலக்கு வைத்து கடந்த காலங்களில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் சொத்து விபரங்களை மக்கள் மத்தியில் காட்டி 'மார்க்கெட்டிங்' செய்ததாக ரஹ்மான் குறிப்பிட்டார்.
ஆனால் இன்று அவர்கள் முன்னையவர்களை விடவும் ஒன்றரை வருட காலத்திற்குள் பாரிய சொத்துக்களுக்கு அதிபதியாக மாறியிருப்பது எவ்வித வெளிப்படைத்தன்மையும் அற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan