கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் தொடரும் கால்நடைகள் திருட்டு: பொது மக்கள் கவலை
கிளிநொச்சி - கனகபுரம் 10 ஆம் மற்றும் 10 பண்ணை பகுதிகளில் தொடர்ச்சியாக கால்நடைகள் திருடப்பட்டு வருவதோடு, களவுகளும் இடம்பெற்று வருகிறது என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்டு வருகின்ற கால்நடைகள் திருடப்பட்டு பராமரிப்பு இன்றி காணப்படுகின்ற காணிகளுக்குள் வெட்டப்படுவதாகவும், இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளர்.
கொள்ளை
அத்துடன், பகல் வேளைகளில் வீடு புகுந்து கத்தி முனையில் பணம், நகைகள் என்பனவும் கொள்ளையிட்டு சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.
இதனால் இரவு வேளைகளில் மட்டு மன்றி பகல் வேளைகளிலும் வீடுகளில் தனியாக இருப்பது அச்சத்தை தருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையங்களில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் எந்த பயனும் இல்லை என்றும் கவலை பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
