தமிழ் சகோதரியின் ஆதங்கம்: கண்டு கொள்ளாது கடந்து செல்லும் பெரும்பான்மை இன மக்கள் (Video)
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை நிகழ்வில் பங்கேற்ற சிங்கள மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெறுப்பூட்டும் விதத்தில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திஸ்ஸ விகாரை கஜிமகா உற்சவ நிகழ்வு நேற்றையதினம் (05.11.2023) இடம்பெற்றதுடன், இன்றைய பூஜை வழிபாடு காலை ஆரம்பமாகியது.
இதன்போது சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக, விகாரையை நோக்கி வரும்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எங்களுடைய மண் எங்களுக்கு வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்மார் கடும் கோஷங்களை எழுப்பினர். என்றபோதும் குறித்த வழிபாடுகள் தொடர்ந்தன.
பொலிஸார் கடமை
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி எங்கள் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்று" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு வந்த பெரும்பான்மை இன மக்கள் போராட்டக்காரர்களுக்கு வெறுப்பூட்டும் விதத்தில் செயற்பட்டிருந்தார்கள்.
அத்துடன் குறித்த பகுதியில் அதிகளவிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது.
மேலும், குறித்த போராட்டத்தில் ஈடுபடுகின்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் நேற்றையதினம் கட்டளை ஒன்றினை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
