இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ் அணி
புதிய இணைப்பு
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் 280 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பங்களாதேஷ் அணி அணிசார்பில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 90 ஓட்டங்களையும் ஷகிப் அல் ஹசன் 82 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இரண்டாம் இணைப்பு
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான போட்டி டெல்லியில் தற்போது நடைபெற்று வருகின்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் சரித் அசலங்கா 108 ஓட்டங்களை பெற்றதுடன் பாத்தும் நிஸ்ஸங்க 41 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.
பங்களாதேஷ் அணிக்கு 280 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி டெல்லி - அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (06.11.2023) 2 மணியளவில் ஆரம்பமாக உள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக வித்தியாசமான ஆட்டமிழப்பு! கடும் கோபத்தில் இலங்கை வீரர் மெத்தியூஸ்(Photos)
பங்களாதேஷ் அணி
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.
மேலும், இலங்கை அணி பங்குபற்றும் போட்டிகளில் படுதோல்வி அடைந்து வருவதால் கிரிக்கெட் ரசிகர்கள் இலங்கை அணி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை கலைக்கப்பட்டு இடைக்கால நிர்வாகக் குழு தலைவராக அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.