உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரம்

World Health Organization Sri Lanka Nalinda Jayatissa
By Rakesh Jun 28, 2026 12:37 AM GMT
Report

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு சர்வதேச அளவில் பெற்றுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்றாக, அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவனம், டெங்கு நோயாளிகள் சம்பந்தமான பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பு மையமாக உத்தியோகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மருத்துவமனை வரலாற்றில் உலக சுகாதார அமைப்பின் இத்தகைய உயரிய சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது மருத்துவமனையாக அங்கொடை தொற்று நோய்கள் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

பிரித்தானியாவிலிருந்து தண்டிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சரித் அபேசிங்க! வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவிலிருந்து தண்டிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சரித் அபேசிங்க! வெளியான அதிர்ச்சித் தகவல்

 வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம்

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனத்தை முன்னிட்டு, தேசிய தொற்று நோய்கள் நிறுவன வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட கௌரவிப்பு விழாவும் புதிய நினைவுப் பலகைத் திறப்பு விழாவும் நடைபெற்றன.

உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரம் | Angoda Infectious Diseases Hospital Designated

இந்நிகழ்விற்குச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமை தாங்கியதோடு, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்கா குணசேகரவும் இதில் விசேட விருந்தினராகப் பங்கேற்றார்.

அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ புதிய நினைவுப் பலகையைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

"நாட்டின் சுகாதாரத் துறையில் இந்த நிகழ்வை ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விசேட மைல்கல்லாகக் கருதலாம்.

கருணாவின் திருமணத்தில் நடந்த யாரும் அறியாத பல வியப்பான சம்பவங்கள்..!

கருணாவின் திருமணத்தில் நடந்த யாரும் அறியாத பல வியப்பான சம்பவங்கள்..!

சர்வதேச ஒத்துழைப்பு மையம்

பல ஆண்டுகளாக எமது மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள், ஆய்வக வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் வழங்கி வரும் தரமான மருத்துவச் சேவை மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்குக் கிடைத்த கௌரவமே இந்த சர்வதேச அங்கீகாரமாகும்.

உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரம் | Angoda Infectious Diseases Hospital Designated

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் 2030 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரையான நான்கு ஆண்டு காலப் பகுதிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ ஒத்துழைப்பு மையமாக இந்த நிறுவனம் செயல்படவுள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் இங்கு ஆரம்பிக்கப்பட்ட முறையான டெங்கு பயிற்சித் திட்டங்கள், இன்று நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காக்கும் திறமையான மருத்துவப் பணியாளர்களை உருவாக்குவதற்கான அடித்தளமாக மாறியுள்ளன." - என்றார்.

இதுவரை காலமும் இலங்கையின் சுகாதாரப் பணியாளர்கள் டெங்கு மற்றும் தொற்றுநோயியல் சார்ந்த உயர்கல்வி மற்றும் பயிற்சிகளைப் பெறுவதற்காகப் பெருமளவிலான நிதியைச் செலவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று வந்தனர்.

வெனிசுவேலாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சி செயல்..!

வெனிசுவேலாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சி செயல்..!

உயரிய அங்கீகாரம்

ஆனால், தற்போதைய இந்த சர்வதேச அங்கீகாரத்தின் மூலம், பிற நாடுகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து டெங்கு தொடர்பான கோட்பாட்டு மற்றும் மருத்துவ அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான வரலாற்று வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏற்கனவே இந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமானது பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் போன்ற அண்டை நாடுகளின் மருத்துவக் குழுக்களுக்கு டெங்கு நோய் குறித்த விசேட மருத்துவ வழிகாட்டல்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரம் | Angoda Infectious Diseases Hospital Designated

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த மையம் எட்ட வேண்டிய முக்கிய இலக்குகளையும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான முகமைப் பிரதானி வைத்தியர் மொமோ டகேச்சி, தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த உடலியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, அமைச்சின் மேலதிக செயலாளர் கே.பி. யெகச்சந்திரா, பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ். எம். அர்னால்ட், டாக்டர் பிரதீப் விஜேசிங்க, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் கபில கண்ணங்கர உட்பட மருத்துவமனையின் பணிப்பாளர் மற்றும் சுகாதார வல்லுநர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US