உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு!

Chandramathi
in பொழுதுபோக்குReport this article
உலகின் 8ஆவது அதிசயமாக கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாக அங்கோர் வாட் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
எட்டாவது அதிசயம்
இத்தாலியின் பாம்பீயை பின்னுக்கு தள்ளி உலகின் எட்டாவது அதிசயமாக மாறியுள்ளது.
உலகின் எட்டாவது அதிசயம் என்பது புதிய கட்டடங்கள் அல்லது திட்டங்கள் அல்லது வடிவமைப்புகளுக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வமற்ற அங்கீகாரம் ஆகும்.
சுமார் 400 கிமீ சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள, இது கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில் அமைந்துள்ளது.
அங்கோர் வாட் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும்.
சுற்றுலா தலம்
உலகில் அறிமுகமே தேவையில்லாத இடங்களில் இதுவும் ஒன்று. உலகில் அதிகமான பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.
அங்கோர் வாட் கோவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும்.
இது முதலில் இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கோவிலாகக் கட்டப்பட்டது. பின்னர் புத்த மதத்தின் முக்கிய கோவிலாக மாறியது.
அங்கோர் என்றால் எட்டுக் கைகளையுடைய விஷ்ணுவைக் குறிக்கும். 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மன் என்ற மன்னரால் கட்டப்பட்டது.
இந்து மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறியிருப்பதை கோவில் சுவர்களிலும் சிற்பங்களிலும் காணமுடியும்.

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
